காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – பூநொச்சிமுனை பகுதியில் உள்ள நீரோடை ஒன்றில் மூழ்கி மாணவன் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் குறித்த நீரோடையில் குளித்துக் கொண்டிருக்கும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
புதிய காத்தான்குடி-01, றிஸ்வி நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் அடுத்த மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments