வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் முறைப்பாட்டை வழங்குவதற்கு வந்தால் அங்கு கடமையாற்றும் பொலிஸார் மக்களை ஏமாற்றுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) குற்றம் சாட்டியுள்ளார்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முறைப்பாட்டை வழங்குவதற்கு வரும் மக்களுக்கு மொழிப் பிரச்சினையோ அல்லது வறியவர்களாகவோ இருந்தால் அவர்களுடைய முறைப்பாட்டை ஒழுங்காக கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பெறுவதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றது.
எனவே வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இவ்விடயமாக நடவடிக்கை மேற்கொண்டு வரும் மக்கள் அனைவரையும் ஒழுங்கான முறையில் முறைப்பாட்டை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 Comments