Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விரைவில் ஒன்பது வைத்தியர்கள் நியமனம்- மா.நடராசா

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒன்பது வைத்தியர்களை நியமிக்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் உறுதி வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சருடனும் மத்திய சுகாதார அமைச்சினருடனும் கலந்துரையாடி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்திய குறைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினோம்.

அந்தவகையில் கட்டடப் பிரச்சினை, வைத்தியர்கள் போதாமை பிரச்சினை, தாதியர் போதாமை பிரச்சினைகள் தொடர்பாக விடயங்கள் முன்வைக்கப்பட்டது.

இதில் புதிதாக நியமிக்கப்படும் வைத்தியர்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒன்பது வைத்தியர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்தினூடாக கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்ட நிதிகள் மூலம் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்திகளை செய்யக் கூடியதாகவுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments