விபச்சார நோக்கத்துடன் வவுணதீவு பகுதியில் நடமாடியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மலையக பெண் ஒருவரைஎதிர் வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிசார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது விபச்சார தொழில்நோக்கத்துடன் நடமாடியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கண்டி பூசல்லா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் (நேற்று) செவ்வாக்கிழமை (25) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்
நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து சந்தேக நபரான குறித்த பெண்ணை எதிர் வரும் 02.11.2016 புதன்கிழமை வரையில்விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவினை பிறப்பித்துள்ளார்..
0 Comments