ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், விசேட கூட்டமொன்றை நடத்த உள்ளனர்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 18ம் திகதி இரவு 7.00 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடத்தப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானங்களை எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த உள்ளனர்.
0 Comments