இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கையில் தமிழினம் சிறுபான்மையாக காணப்படுகின்றன நிலையில் நீண்டகாலமாக பல்வேறு இன, மத ரீதியான இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இந்நிலையில் தமிழினமும் தேசிய இனமாக கருதப்பட்டு சம அந்தஸ்து அளிக்கப்படவேண்டியதன் அவசியம் தொடர்பாக இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது


0 Comments