இலங்கைக்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இல்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
எனினும் அவ்வாறான எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நாட்டின் பாதுகாப்பில் உரிய முன்னடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.


0 Comments