இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியுசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்போட்டியில் 178 ஓட்டங்களால் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.மேலும் இதன் மூலம் டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இந்தியா முதலாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.
கொல்கத்தாவில் இடம்பெற்ற இந்தபோட்டியில் வெற்றிபெறுவதற்கு 375 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் ஆடிய நியுசிலாந்து அணி 198 ஓட்டங்களிற்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.நியுசிலாந்து அணி சார்பில் லதம் 74 ஓட்டங்களை பெற்றார்,அஸ்வின், சமி,ஜடேஜா ஆகியோர்மூன்று தலா மூன்றுவிக்கெட்களை கைப்பற்றினர்.
0 Comments