இலங்கை சினிமா துறை தொடர்பில் நியூஸிலாந்து அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, அந்த நாட்டின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.
அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை திரைப்படத் துறையை நவீனமயப்படுத்துதல் மற்றும் தேசிய திரைப்பட அபிவிருத்தி சபையை நிறுவுதல் என்பன தொடர்பில் நியூஸிலாந்தின் அனுபவம் மற்றும் அறிவு, ஆதரவு மட்டுமன்றி தனிப்பட்ட உதவிகளையும் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, அவர் இதன்போது கூறியுள்ளார்.
0 Comments