கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர்களை நியமிக்க முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமையால் கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பம் பாதிக்கப்படும். உயர்தரத்தில் அதிகூடிய வெட்டுபுள்ளி ((Z-score) பெற்று பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் வேலைவாய்ப்பின்றி கிழக்கு மகாணத்தில் 3500 பட்டதாரிகள் காணப்படுகின்றனர்.
இதன் காரணமாக இவ்விடயம் தொடர்பாக தாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கமுடியாது போனால் எதிர்வரும் காலத்தில் உயர்தரத்தில் அதிகூடிய வெட்டுப்புள்ளி பெற்றவர்களை கல்வியியல் கல்லூரிக்கு தெரிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் வேண்டும்.
ஏனைய மாகாணங்களில் கல்விமானிப் பட்டம் பெற்றவர்களுக்கு பரீட்சையின்றி, போட்டியின்றி ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகின்றது. ஆனால் இதேபோன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விமானிப் பட்டத்தினைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு அச்சலுகை கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments