அநுராதபுரத்தில் கல்னேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெலபதுகம பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது இளைய மகன் கல்னேவ பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கல்னேவ , ஹெலபதுகம பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடையவர் ஆவார்.
கல்னேவ , ஹெலபதுகம பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இதன்போது, “தனது தாய் கல்னேவ பிரதேசத்தில் உள்ள நபரொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவின் காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்ட தாய் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம்” என இளைய மகன் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் பிரேத பரிசோதனையின் போது தாயின் தலையில் பலத்த காயங்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், தாயின் இளைய மகன் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்னேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments