உலகில் பல இடங்களில் மறைந்திருக்கும் பயங்கர சடங்குகளையும், ஆச்சரியங்களையும் நம்மால் நம்பவே முடிவதில்லை.
இப்படி கூட அதிசயங்கள் நடக்குமா என பல கேள்விகள் நமக்குள் தோன்றும் அளவிற்கு பல விஷயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
அப்படி ஒரு அதிசயம் தான் அனந்த பத்மநாப சுவாமி கோயிலை காக்கும் சைவ முதலை. கேரளா அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட புதையல் உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியது.
அந்த வரிசையில் தற்போது அனந்த பத்மநாப சுவாமி கோயிலின் நீரால் சூழப்பட்ட ஆதிக்கோயிலை முதலை ஒன்று காவல் காத்து வருகின்றதாம். சைவம் மட்டுமே சாப்பிடும் அந்த முதலையை பபியா என்ற பெயரில் தான் அழைப்பார்களாம்.
இந்த முதலையை பார்த்தால் அதிர்ஷ்டம் என்பதால் பக்தர்கள் இந்த முதலையின் தரிசனத்திற்காக வரிசையில் காத்து நிற்கின்றார்களாம்.
மேலும் நீரால் சூழப்பட்ட இந்த கோவிலின் குளத்திற்குள் முதலை காவல் காப்பதன் பின்னணியிலும் சில அமானுஷ்யங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு முதலை இறந்துவிட்டால், அடுத்து, ஒரு முதலை எங்கிருந்தோ வந்து இந்த காவல் காக்கும் பணியை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments