குறித்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் , கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பா.உ சி.சிறிதரன், மா.சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய ப.சத்தியலிங்கம் குறிப்பிடுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் மருத்துவ மாதுக்களின் உதவியுடன் விசேட தேவையுடையோருர் தொடர்பிலான தவ்கள் முழுமையாக திரட்டி கணணி மயப்புடுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஏனைய மாவட்டங்களிலும் குறித்த தகவல் திரட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று ஆரம்பித்துள்ள குறித்த சேவையானது கனடா நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் முன்னெடுக்கப்புடுவதாக தெரிவித்தார். குறித்த சேவையில் தாதி, உளநல சுகாதார உத்தியோகத்தர், உதவியாளர், சாரதி அடங்கலாக நால்வர் இடங்கிய குழுவினர் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அழைக்கும்போது குறித்த நபரின் வீட்டுக்கு சென்று குறித்த சேவையை வழங்குவதே குறித்த திட்டத்தின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறுித்ததிட்டானது அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்திலும், தொடர்ந்து ஏனைய 5மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு விசேட தேவைக்குட்பட்டோருக்கான விசேட வைத்தியசாலை ஒன்றினை விரைவில் மங்குளம் பகுதியில் அமைக்க உள்ளதாகவும் அவர் தன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிட தக்கதாகும்
0 Comments