கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாகத்தில் மாணவர்களிடையே நேற்று மாலை ஏற்பட்ட மோதலில் 04 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக மாணவர் விடுதியில் முன்னெடுக்கப்பட்ட சுத்திகரிப்பின் போது முதலாம் வருட மாணவர்களுக்கும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான விசாரணைக் குழு இன்று நியமிக்கப்படவுள்ளதாக திருகோணமலை வளாக முதல்வர் வி.கனகசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments