கிராம சேவையாளர்கள் வழக்குகளில் ஆஜராக வேண்டும் என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கு நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எதிரிகள் ஆஜராகாத வழக்குகள் மற்றும் பராமரிப்பு வழக்குகளில் கிராம சேவையாளர்கள் நீதிமன்றில் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டுமெனவும் கூறியிருந்தார்.
குறித்த வழக்கின் போது, எதிரிகள், பிரதிவாதிகள் வதிவிட விபரங்களை வெறும் அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அனுப்பாது நேரடியாக நீதிமன்றுக்கு ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டுமென நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கிராம சேவையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments