தான் எம்.பியாக இருந்திருந்தால் யாழ்ப்பாணத்திற்கு சென்று வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை கதிரையிலிருந்து தூக்கியிருப்பேன் என முன்னாள் எம்.பியான மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நான் இப்போ பாராளுமன்றத்தில் இல்லை. பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருந்திருப்பேனென்றால் மற்றையவர்கள் போல் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். யாழ்ப்பாணத்திற்கு போய் விக்னேஸ்வரனை கதிரையிலிருந்து தூக்கி வீசியிருப்பேன். என அவர் தெரிவித்துள்ளார்.
விக்கினேஸ்வரன் தொடர்பாக தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்
0 Comments