நாடு பூராகவுமுள்ள சாரதி பயிற்சி பாடசாலைகளை சோதனையிடுவதற்கு மோட்டார் வாகன திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் வாரத்தில் அந்தப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
தரம் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக இதன் போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் சாரதி பயிற்சிக்கான கட்டணம் தொடர்பாக கட்டுப்பாட்டு கட்டணத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 Comments