இலங்கையில் இன்று முதல், மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் குறித்த அனல் மின் நிலையத்தின் ஒரு மின் பிறப்பாக்கி (generator) திருத்தப்பட்டுள்ள நிலையில் மின்வெட்டை திட்டமிட்டபடி அமுல்படுத்தத் தேவையில்லை என, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
0 Comments