அண்மைய நாட்களின் அதிகரித்த வெப்பநிலை நிலவிவந்த நிலையில் 136 வருங்களின் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் அதகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமாக 6300 வானிலை ஆய்வு பெற்றுக்கொள்ளப்பட்ட வெப்ப அளவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, 136 வருடங்களின் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தொடர்ச்சியாக 11 மாதங்கள் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை அளவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதம் அதிகளவான வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 0.91 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் பதிவாகியிருப்பதாகவும், இது 1951ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரையிலான செப்டம்பர் மாத சராசரி வெப்பத்தை விட அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் அதிகளவான வெப்பமான மாதமாக பதிவாகியிருந்தது. இதேவேளை நாட்டில் கடந்த நான்கு மாதங்களாக அதிகரித்த வெப்பநிலை காரணமாக வறட்சியான காலநிலை நிலவி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments