எதிர்காலத்தில் மனிதனுக்கு இறப்பே இல்லை என்ற நம்பமுடியாத கருத்தை கூகுல் நிறுவனத்தின் Director Of Engineering ஆக கடமையாற்றும் Ray Kurzweil கூறியுள்ளார்.
இவர் கடந்த காலங்களில் கூறிய பல விடயங்கள் நிஜமாக நடந்திருக்கின்றன.
இவருடைய கணிப்பின்படி 30 ஆண்டுகளில் நமது மூளையில் பதிந்திருக்கும் எல்லா விடையங்களையும் ஒரு கணினியில் பதிவேற்ற முடியும்.
இதன் மூலம் நமது உடல் இறந்துவிட்டாலும் கணினியின் மூலம் நாம் நமது வாழ்வை தொடரலாம் என்பதே அதன் விளக்கமாகும்.
இதனாலேயே எதிர்காலத்தில் மனிதனுக்கு மரணமே இல்லை என Ray Kurzweil திட்டவட்டமாக கூறியுள்ளார்.
உடல் இறந்தாலும் எமது கனவுகள், நினைவுகள், இலக்குகள் அனைத்துடனும் ஒரு செயற்கை வாழ்க்கையை கணினிக்குள் வாழ முடியும் எனவும் தெளிவு படுத்தியுள்ளார்.
மனித மூளையைப் போல ஒரு அதிசயம் இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை. ஆதிகாலங்களில் முடியாது என்ற விடயங்கள் எல்லாம் தற்காலத்தில் நிறைவேற்றப்படுகின்றன.
அதேபோல் மனிதனுக்கும் மரணமில்லை என்ற விடயமும் எதிர்காலத்தில் மெய்யாக இருக்கின்றது.
0 Comments