எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் குறிப்பிடத்தக்க மழையை எதிர்ப்பார்க்க முடியுமெனவும் இதன்படி வறட்சியான காலநிலை படிப்படியாக குறைவடையுமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி 13ஆம் திகதிக்கு பின்னர் வடமேல் , வட மத்தி ஆகிய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்க முடியும் என்பதுடன் மேல் , சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யுமெனவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் 8 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments