மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி கட்டண அதிகரிப்பு முறைமையை தயாரிக்கும் பணிகளை மின்சார சபை ஆரம்பித்துள்ளதாகவும் அதற்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியை கோர அந்த சபை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாதந்தம் அந்த சபை நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அதனை ஈடு செய்யும் வகையிலேயே கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
0 Comments