Advertisement

Responsive Advertisement

சுமந்திரன் மீது மக்கள் பாய்ச்சல் : வாகனத்தையும் கைவிட்டு தப்பியோடினார்

அரசியல் ஆய்வாளரான மு.திருநாவுகரசின் நூல் வெளியிட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துக்கொண்டிருந்த நிலையில் அவர் அங்கு தெரிவித்த கருத்துக்களால் ஆத்திரமுற்ற மக்கள் அவருக்கு எதிராக கூச்சலிட்டு அவரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இன்று காலை குறித்த நிகழ்வு பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையில் சரஸ்வதி  மண்டபத்தில் ஆரம்பமான போது அதில் கஜேந்திர குமார் பொன்னம்பலமும் , பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்துக்கொண்டிருந்தனர். இவ்வேளையில் சுமந்திரன் உரையாற்றும் போது கஜேந்திரகுமாரின் கட்சி தொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைத்த போது அங்கிருந்த மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்தும் அவர் உரையாற்றியுள்ளார். இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக என்ன நடவடிக்கையெடுத்துள்ளீர்கள் என்றெல்லாம் மக்கள் அவரிடம் கேள்வியெழுப்ப எதற்கும் பதிலளிக்காது அவர் உரையாற்றினார்.
பின்னர் பேராசிரியர் சிற்றம்பலம் உரையாற்றிய பின்னர் கஜேந்திரக் குமார் சுமந்திரனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதன்பின்னர் மெதுவாக அங்கிருந்து சுமந்திரன் வெளியேறிய போது அவரை துரத்திக்கொண்டு மக்கள் சென்றுள்ளனர்.

Post a Comment

0 Comments