Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வீதியை மறித்து டயர்களை எரித்து போராட்டங்கள் முன்னெடுப்பு

தோட்ட தொழிலாளர்களுக்கான முறையான சம்பள உயர்வை மரியாதையுடன் பெறற்று தர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து அட்டன், பொகவந்தலாவ மறித்தும் பேரணியை நடத்தியும் மற்றும் வீதியின் டயர்களை எரித்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
28.09.2016 அன்று காலை 9 மணி முதல் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 4 பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள்4 இடங்களில் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் 2 மணி நேர போக்குவரத்து தடை இடம்பெற்றது.
நோர்வூட் வெஞ்சர், பொகவந்தலாவ ஆகிய தோட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரங்கணக்கான தொழிலாளர்கள் இப்போராட்டங்களில் கலந்து கொண்டனர். இதன்போது 17 மாதங்களாக காலம் கடத்தப்பட்டு பேச்சுவார்த்தை இழுபறியை முன்னெடுத்து சென்ற தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் இனிமேலும் காலம் தாமதிக்காது முன்னெடுக்கப்பட்ட சம்பள உயர்வினை மரியாதையுடன் பெற்று தர வேண்டும் என வழியுறுத்தினர்.
இதன்போது தொழிற்சங்கங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அத்தோடு தீபாவளியை கூட கொண்டாட முடியாமல் வறுமை நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய தொழிலாளர்கள் சம்பள உயர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்தவர்கள் தோட்ட தொழிலை முன்னெடுத்து கொண்டு போராட்டத்தை தொடர்வதாகவும், தெரிவித்தனர்.IMG_1044
IMG_1047

Post a Comment

0 Comments