மேல் மாகாணத்தில் மீண்டும் பாதாள குழுக்கள் தலைதூக்கியுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மொரட்டுவ அங்குலான பகுதியில் இரண்டு பாதாள குழுக்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான தகவல்களை புலானாய்வு பிரிவினர் சேகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக தலைதூக்கியுள்ள மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பாதாள குழுக்களின் தலைவர்கள் சிலர் ஏற்கனவே பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியல்களில் வைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் அவர்கள் உள்ளே இருந்தாலும் அவர்களின் கீழான குழுக்கள் தொடர்ந்தும் செயற்பாட்டில் இருப்பதாக தகவல்களை சேகரித்துள்ள புலனாய்வு பிரிவினர் அவர்களை பிடிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
0 Comments