Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

போதைப் பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுக்க புதிய திட்டங்கள் ஆரம்பம் : ஜனாதிபதி

நாட்டுக்குள் போதைப் பொருட்கள் கொண்டு வரப்படுவதை தடுக்க பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போதை வில்லைகள் , சிகரட் , சாராயம் போன்ற பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக நாம் அறிவோம். இதனால் ஏற்படும் நோய்களும் அதிகமாகும். இதனால் இந்த நிலைமையை இல்லாது ஒழிக்க வேண்டிய பொறுப்பை நாம் எல்லோரும் கொண்டுள்ளோம்.
எமது நாடு அழகான சிறிய தீவாகும். வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்கள் போதைப் பொருளை இங்கு கொண்டு வருவதை தடுப்பது என்பது பாரிய சவாலாகும். தேசிய பாதுகாப்பு சபையில் இது தொடர்பாக ஆராய்ந்துள்ளோம். போதைப் பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுக்க கடந்த காலத்தைவிடவும் திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளோம். இதனை முப்படையினர் , பொலிஸ் மற்றும் சுங்க அதிகாரிகளினூடாக நடத்துவோம். என அவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments