Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஐ. நா பெருந்தவறு இழைத்துவிட்டது: ருவாண்டா இனப்படுகொலையுடன் முள்ளிவாய்க்காலுக்கு சமாந்திரம் வரைந்தார் பான் கி மூன்

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களை பாதுகாப்பதில் ஐ. நா பெருந்தவறு இழைத்துவிட்டது என்று ஒப்புக்கொண்டிருக்கும் அதன் செயலாளர் நாயகம் பான் கி மூன், கடந்த 10 வருடங்களில் ருவாண்டா படுகொலையாயினை தடுப்பது உட்பட ஐ. நா தவறு இழைத்த இடங்களில் இலங்கை சமீப உதரணமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்ட பான் கி மூன் இன்று தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை சர்வதேச தொடர்புகள் ஆய்வுமையம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினார்.
சேர்பினிக்காவில் ஐ. நா பாதுகாப்பதற்கு தவறியதால் பலர் படுகொலைசெய்யப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் இலங்கையில் மீண்டும் பொதுமக்களை பாதுகாக்க ஐ. நா தவறிவிட்டது என்று தனது உரையில் கூறிய பான் கி மூன், “சேர்ப்பினிக்காவின் பின்னர் மீண்டும் இது ஒருபோதும் நிகழக்கூடாது என்று என்று கூறினோம். ஆனால் மீண்டும் இலங்கையில் இது நிகழ்ந்துவிட்டது ” என்கிறார்.
இந்த அவலத்தின்பின்னர் இலங்கை ஒரு மீள்நல்லிணக்க செயற்ப்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளவேளை , ஐ. நா தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கிறது என்று கூறினார்.
இலங்கை யுத்தத்தின்போது ஐ. நா சற்று துடிப்புடன் இருந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருந்திருக்கமுடியும் என்று பான் கி மூன் கூறியதுடன் இலங்கையில் இருந்து பல படங்களை ஐ. நா கற்றிருப்பதாக தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் இலங்கை அரசாங்கம் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதுடன் இராணுவத்தினர் வசம் உள்ள காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க துரித நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் பான் கி மூன் வலியுறுத்தினார்.
இதேவேளை, முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கையானது சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் கடந்த காலத்தில் இருந்து இலங்கையர்கள் முன்னோக்கி செல்லவேண்டும் என்றும் கூறினார்.

Post a Comment

0 Comments