பாராளுமன்றத்தின் அனுமதியின் சட்டவிரோதமான முறையில் அதிகரிக்கப்பட்டு மக்களிடமிருந்து அறவிடப்பட்ட வற் வரியை மக்களிடம் மீள செலுத்துமாறு ஜே.வி.பி அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அப்பாவி மக்களை ஏமாற்றி குறித்த வற் வரியை அறவிட்டுள்ளதாகவும் இது மக்களுக்கு அரசாங்கம் செய்த அநீதியெனவும் இதனால் அந்தப் பணத்தை மீள கொடுக்கும் வகையில் முறையையொன்றை தயாரிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
நேற்று ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தே இவ்வாறு தெரிவித்துள்ளார்
0 Comments