மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பகுதியில் உயிரிழந்த இளம்குடும்பஸ்தர் மனைவியினால் தாக்கப்பட்டு உயிரிழந்தாரா என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பூச்நொச்சி, இசைநடனக்கல்லூரி வீதியில் முதலாம் குறுக்கில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வெள்ளத்தம்பி மகேஸ்வரன்(26வயது)எனவும் அவரது மனைவியான சிந்து மகேஸ்வரன் என்பவர் நஞ்சு அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவருவதாகவும் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்தவர் மனைவியானல் தாக்கப்பட்டு உயிரிழந்தாரா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு வருகைதந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசாவின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார்.
0 Comments