Advertisement

Responsive Advertisement

பாராளுமன்ற ஆயுட்காலத்தை நீடிக்கும் யோசனை எதுவும் இல்லை: ரணில் உறுதி

பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஐந்து ஆண்டுகளையும் நீடிக்கும் நிமித்தம் அரசாங்கமோ அல்லது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எந்தவொரு அரசியல் கட்சியுமோ அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு யோசனைகள் எதனையும் முன்வைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்திருக்கின்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று பிரதமரிடமிருந்து நேரடிப் பதிலைப் பெற்றுக்கொள்வதற்கான கேள்வி நேரத்தின் போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த உதய கம்பன்பில எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் அதனை மேலும் நீடிப்பதற்கான யோசனைகள் எதுவும் அரசியலமைப்புப் பேரவையில் முன்வைக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது உறுதியாகத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments