Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பரீட்சை முறைக்கேடுகளை அறிவிக்க விசேட இலக்கங்கள் அறிமுகம்

தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது இடம்பெறும் பரீட்சை மண்டப பகுதிகளில் ஏதேனும் மோசடிகள் இடம்பெறுமாகவிருந்தால் அது தொடர்பாக முறைப்பாடு செய்யும் வகையில் பரீட்சைகள் திணைக்களம் விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி பரீட்சைகள் திணைக்களத்தின் உடனடி தொலைபேசி இலக்கமான 1911 , பாடசாலை பரீட்சைகள் பிரிவு இலக்கங்களான  0112784208 , 0112784537 , 0113188350 ஆகியவற்றுக்கோ அல்லது பொலிஸ் தலைமையக இலக்கமான 0112421111 என்ற இலக்கத்திற்கோ அல்லது பொலிஸ் அவசர சேவை இலக்கமான 119ற்கோ தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன்  commissinerdoe@gmail.com என்ற பரீட்சைகள் ஆணையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கோ அறிவிக்க முடியுமெனவும்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments