Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வீதி விபத்தில் ஒருவர் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் மஞ்சல் கோட்டில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
 நேற்று காலை தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள மஞ்சல் கடவையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மஞ்சல்கடவையூடாக வீதியை கடக்கமுற்பட்ட பொதுமக்களுக்கு வழிவிடுவதற்காக நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் பின்புறமாகவந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
இதன்போது களுவாஞ்சிகுடியை சேர்ந்த க.சந்திரமோகன் (36வயது)என்பவரே படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர் நீண்டதூரம் தூக்கியெறியப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வீதி விபத்தில் ஒருவர் காயம்
இது தொடர்பில் டிப்பர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments