சிறுபான்மையின விவகாரங்கள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஒக்ரோபர் 10 ஆம் திகதி தொடக்கம், 20ஆம் திகதி வரை அவர் இலங்கையில் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பயணத்தின் போது, இலங்கையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் சிறுபான்மையின மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments