Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு நகரில் இன்று இரவு முதல் மூடப்படும் மதுபானசாலைகள்


மட்டக்களப்பு நகருக்குள் இருக்கும் மதுபானசாலைகள் இன்று இரவு முதல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை வரை மூடப்படும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் வேளையில் ஆலய பரிபாலனசபையினர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



இது தொடர்பில் மதுவரித்திணைக்கள ஆணையாளரிடம் தொடர்புகொண்டு இது தொடர்பாக அறிவிப்பு வழங்கப்பட்டு இன்று இரவு மதுபானசாலைகள் மூடப்படும் நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30மணிக்கு பின்னரே மதுபான சாலைகள் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.



ஆலய சூழலில் நாளை தீர்த்தோற்சவ வேளையில் நடைபெறும் வேண்டத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments