மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செட்டிபாளையம் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா 29/07/2016 ந் திகதி பாலர்பாடசாலை ஆசிரியை திருமதி ரஜனி விவேகானந்தம் தலைமயில் நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திரு.எஸ்.குபேரன், சனசக நிலைய உத்தியோகஸ்தர் திருமதி பிரபாளினி றொபேட், முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.அருந்ததி சீவரெத்தினம், செட்டிபாளையம் ம.வி அதிபர் திரு.த.அருள்ராஜா, ஓய்வு நிலை முன்பள்ளி உ.க.பணிப்பாளர் திரு.ந.புவனசுந்தரம், சிவன் ஆலய பிரதமகுரு சிவ அ.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
திருமதி.கஜந்தினி கமல்ராஜ் பாலர் உதவி ஆசிரியை விளையாட்டு ஒழுங்கினை மேற்கொள்ள விளையாட்டு மைதான ஒழுங்கை நியுட்டன் விளையாட்டு கழகம் மேற்கொண்டது. பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.சி.தியாகராஜா நன்றியுரை வழங்கினார்.
0 Comments