இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர திட்டம் அமையும் இடம் கடலை நிரப்பி செய்யப்படுவதால அது இலங்கைக்கு யாருக்கும் சொந்தமில்லாத ஒன்றாகவே காணப்பட்டது. ஆனால் அது தொடர்பான ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொண்டு அந்த காணிக்கான உரிமையை இலங்கை பெற்றுக்கொள்வதற்கு குறித்த திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள சீன நிறுவனத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன்படி திருத்தம் மேற்கொண்டு அந்த காணிக்கான உரிமை இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. இதற்கிணங்க வர்த்தமானியில் அது தொடர்பாக அறிவித்து இலங்கையின் வரை படத்தில் அதனை உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 Comments