வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விகாரைகள் உள்ளிட்ட மதத்தலங்களை புனரமைப்பு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி அவற்றை புனரமைக்கும் பொறுப்புகளை விகாரைகள் மற்றும் மதத்தலங்கள் முகாமைத்துவ பராமரிப்பு சபையிடம் கையளிக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினனால் அமைச்சரவையில் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான விகாரைகள் மற்றும் மதத்தலங்களை மறுசீரமைப்பு செய்வதன் தன்மை மற்றும் அதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களில் இருந்து கிடைக்கும் நிதி மற்றும் பொருட்கள் ஆகியவற்றினை கருத்திற் கொண்டு குறித்த மாவட்டங்களின் செயலாளர்களின் மற்றும் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் அவற்றின் புனரமைப்பு பணிகளை துரித கதியில் முன்னெடுக்கும் வகையில் அது தொடர்பான பொறுப்புகளை விகாரைகள் மற்றும் மதத்தலங்களின் முகாமைத்துவ பராமரிப்பு சபைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
0 Comments