வடக்கு ரயில் மார்க்கத்தை இடைமறித்து மதவாச்சி ரயில் நிலையத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கும் , மன்னாரிலிருந்து கொழும்பிற்குமான ரயில்கள் மதவாச்சி ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதன்காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
0 Comments