இன்று கொழும்பு பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை – அவுஸ்திரெலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியின் போது ஊதிகளை மைதானத்திற்குள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இன்றைய தினம் மைதானத்திற்கு வரும் பார்வையாளர்கள் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் போட்டிஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments