Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஈழத்து திருச்செந்தூர் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

ஈழத்து திருச்செந்தூர் என புகழ்பெற்ற மட்டக்களப்பு,கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தமிழ் மரபுகளையும் பண்பாடுகளையும் கொண்டதாக இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவருகின்றது.
இன்று காலை கல்லடி சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரப்பட்டு ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜைகளுடன் கிரியைகள் ஆரம்பமானது.
இதன்போது விசேட யாகபூஜை மற்றும் அபிசேகம் நடைபெற்று பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூல மூர்த்தி அபிசேகம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தம்பத்து விநாயகருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலை ஆலய வீதியுலா வலம் வந்து கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து தம்பித்திற்கு விசேட அபிசேகம் ஆராதனைகள் நடைபெற்றதுடன் முருக்பெருமானுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று வீதியுலாவும் நடைபெற்றது.
வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் மறுதினம் தீர்த்தோற்சவம் நடைபெறும்.


IMG_0073IMG_0099

Post a Comment

0 Comments