வட மாகாண சபையின் செயற்பாடுகளில் தலையிடும் எண்ணம் எதுவும் அரசாங்கத்துக்கு இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே இவாறு தெரிவித்த அவர், வட மாகாண சபை மற்றும் அதன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருடன் அரசாங்கம் ஒத்துழைத்து செயற்பட்டு வருவதாக அவர் கூறினார்.
வடக்கின் மீளக்குடியமர்தல் விடயம் தொடர்பிலான செயலணியில் விக்னேஸ்வரன் உள்ளடக்கப்படாமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசியபோதே இவ்வாறு கூறிய பிரதமர், இந்த விடயம் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு வட மாகாண சபையின் பிரதம செயலாளருடன் இணைந்து பணியாற்றுவதாக கூறினார்.
0 comments: