கொலைசெய்யப்பட்டதாக கருதப்படும் முன்னாள் றக்பி வீரர் வாசிம் தாஜூடீனின் உடல் பாகங்கள் சில காணாமல் போனதற்கு முன்னாள் சட்ட மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகரவே காரணம் என்று சுகாதார, ஊட்ட மற்றும் சுதேச அமைச்சின் செயலாளர் அனுரா ஜெயவிக்கிரம நேற்று கொழும்பு மேலதிக நீதிமன்றத்துக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வாசிம் தாஜூடீனின் உடலை முதல் தடவை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அனுரா ஜெயவிக்கிரம பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பு பிரேத குளிர் அறையில் வாசிம் தாஜூடீனின் உடலின் பல பாகங்கள் காணாமல் போயுள்ளதாக முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் பேராசிரியர் ஆனந்த சமரசேகர கூறி இருந்தார். அதி குளிர் பகுதி ஒன்றில் தாஜூடீனின் உடல் பாகங்களை வைக்குமாறு இரண்டு சிறூழியர்களிடம் தான் அறிவுறுத்தி இருந்ததாக அவர் கூறியிருந்தார். ஆனால் இதனை இரண்டு சிறூழியர்களும் மறுத்திருந்தனர்.
0 comments: