இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் தலை மன்னார் ஆகியவற்றுக்கிடையே பாலம் அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு அரசாங்கம் இணங்கி உள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்தமையை ஜனாதிபதி மறுத்துள்ளார்.
இந்த திட்டம் தொடர்பான இறுதி முடிவு எடுப்பது குறித்து அமைச்சர் கபீர் காசிம் இந்தோனேசியாவில் வெளியிட்ட கருத்து ஒன்று குறித்தே பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டிருந்தார். இந்த திட்டம் குறித்து வாசுதேவ நாணயக்காரவும் எதிரான கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அத்தகைய பாலம் ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் 60 மில்லியன் தமிழ்நாட்டு தமிழர்கள் இலங்கைக்குள் நுழைவர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
0 comments: