காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் அமைக்கும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில், சில திருத்தங்களுடன் இச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, இந்த சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியால் முன்மொழியப்பட்ட திருத்தத்தை உள்ளடக்குவதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, வாக்கெடுப்பின்றி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
0 Comments