2008–ம் ஆண்டில் செர்பியாவில் இருந்து பிரிந்து தனிநாடாக சுதந்திரம் அடைந்த கொசோவா நாடு இந்த ஒலிம்பிக்கில் முதல்முறையாக கலந்து கொண்டது.
தொடக்க விழாவில் கொசோவா அணிக்கு தலைமை தாங்கிய மஜ்லின்டா கேல்மென்டி பெண்களுக்கான ஜூடோ போட்டியில் (52 கிலோ) பிரிவில் இத்தாலியின் ஜிப்ரிடாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார்.
கொசோவாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்ததும் உணர்ச்சி வசப்பட்ட மஜ்லின்டா கேல்மென்டி ஆனந்த கண்ணீர் விட்டார். அவர் கூறுகையில், ‘இந்த தருணத்துக்காகத் தான் 4 ஆண்டுகளாக காத்திருந்தேன். பதக்கம் அணிவிப்பின் போது எனது தேசத்தின் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதை கேட்ட போது உள்ளப்பூரிப்பில் மிதந்தேன்என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments