Advertisement

Responsive Advertisement

திருகோணமலையில் அமெரிக்க கடற்படை தளம் அமைக்கும் திட்டம் : பேராசிரியர் திஸ்ஸ விதாரண

அமெரிக்காவின் கடற்படை தளம் ஒன்றை திருகோணமலையில் அமைக்கும் திட்டம் அரங்கேற்றப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் , இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துவதற்கு இன்னமும் அரசாங்கத்துக்கு முடியாதுள்ள நிலையில், இதனை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
கடற்படை தளம் அமைக்கும் விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க கடற்படையின் குழு ஒன்றி ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments