Advertisement

Responsive Advertisement

போதைப்பொருள் பாவனைகளுக்கு மாணவர்கள் அடிமையாகும் நிலை

பாடசாலைகளில் இருந்து இடைவிலகி மற்றும் ஒழுங்கற்ற வரவுகளை உடைய மாணவர்கள் போதைப்பொருள் பாவனைகளுக்கு அடிமையாகும் நிலை காணப்படுகின்றது என மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட சிறுவர் அபிவிருத்தி தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடல் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் தலைமையில் இன்று (04-08-2016) பகல் 11.30 மணிக்கு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் குடும்ப வறுமை காரணமாக சிறுவர் இல்லங்களில் இணைக்கப்பட்டுள்ள சிறுவர்களை குடும்பங்களுடன் மீள இணைத்தல் சிறுவர் அபிவிருத்தி குழுவினது செயற்பாடுகள் சிறுவர் கழகங்களின் செயற்பாடுகள் தனியார் கல்வி நிலையங்களின் அடிப்படை வசதிகள் முன்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு திட்டங்கள் மற்றும் பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களை மீளிணைத்தல் போன்ற பல்வேறு விடங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைகளுக்கு அடிமையாகுதல் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுதல் போன்ற சம்பவங்களில் அதிகம் இவ்வாறு பாடசாலை செல்லாத சிறுவர்கள் மற்றும் ஒழுங்கற்ற வரவுகளை கொண்ட மாணவர்கள் ஈடுபடுகின்றதை அறியமுடிகின்றது.
இவர்களது எதிர்காலத்தை கருத்திறகொண்டு அனைவரது செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேற்படி கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் மேலதிக அரச அதிபர் மற்றும் பொலிசார் துறைசார் அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments