கொழும்பு தேசிய மருத்துவமனை இருதச சத்திரசிகிச்சை மையத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாக நோயாளிகள் மரணத்தைத் தழுவும் துரதிஷ்டநிலை ஏற்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து இருதயசத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கமாகும்.
தேசிய மருத்துவமனையின் இருதய சிகிச்சை மையத்தில் இதற்காக மூன்று சத்திர சிகிச்சைக் கூடங்கள் இருந்த போதிலும் இடநெருக்கடி காரணமாக ஒவ்வொரு நோயாளியும் தமக்கான சத்திரசிகிச்சைக்கு மாதக்கணக்கில் மட்டுமன்றி வருடக்கணக்கில் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருத்த வேலைகளுக்காக இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்கள் மூடப்பட்டு, எஞ்சியிருக்கும் சத்திர சிகிச்சைக் கூடத்தில் அவசர சத்திர சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக வருடக்கணக்காக காத்திருப்பு பட்டியலில் (வெயிட்டிங் லிஸ்ட்) இருந்த நோயாளிகளில் பலர் துரதிருஷ்டவசமாக உயிரிழக்கும் நிலையை எதிர் கொண்டுள்ளனர்.
மாற்று ஏற்பாடுகள் இன்றி குறித்த சத்திர சிகிச்சைக் கூடங்கள் மூடப்பட்டிருப்பதே இதற்கான காரணமாகும்.
இந்நிலையில் திருத்த வேலைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சத்திர சிகிச்சைக் கூடங்கள் இன்னும் இரண்டு மாதங்களின் பின்னரே செயற்படும் நிலைக்கு வரும் என்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
0 Comments