கடந்த 16 ஆண்டுகளாக இந்தியா மணிப்பூர் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இரும்பு பெண் என்று அழைக்கப்படும் இரோம் சர்மிளா தனது உண்ணாவிரத போராட்டத்தை இன்று கைவிட்டுள்ளார்.
2000ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய பாதுகாப்பு படையினரால் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஆனால் இந்த பாதுகாப்பு படையினருக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்த சட்டத்தை நீக்க கோரி சர்மிளா 16வருடங்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்மணி உணவு மற்றும் நீர் அருந்துதல் ஆகியவற்றினை மறுத்துள்ளார்.
பின்னர் அதிகாரிகள் மூலம் இவருக்கு பல அழுத்தங்களின் மத்தியில் மூக்கினூடாகஉணவு மற்றும் நீர் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இரோம் சர்மிளா தெரிவிக்கையில் தான் 16 வருடங்களாக உண்ணாவிரதம்மேற்கொண்டும் எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை.
ஆனால் இனி அரசியல்ரீதியாக போராடுவேன் என இரும்பு பெண்இரோம் சர்மிளா கூறியுள்ளார்.
0 Comments