இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த அணித்தலைவர் என்ற நிலைக்கு மத்தியுஸ் உயரக்கூடிய வாய்ப்புள்ளதாக முன்னாள் அணித்;தலைவரும் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகடெஸ்ட் தொடரை வெல்வது என்பது இலகுவான விடயமல்ல. இதனை சாதித்த மத்தியுஸ் இலங்கையின் மிகச்சிறந்த அணித்தலைவராக உயர்வார்.
இந்த தொடரின் முதலாவது நாளிலிருந்து அவர் சாதகமான மனோநிலையுடன காணப்படுகின்றார்இங்கிலாந்துடனான தொடரின் போது இதனை காணமுடியவில்லை.
ஆஸ்திரேலியர்கள் மிகவும் கடினமானவர்கள், ஆக்ரோசத்துடன் விளையாடுவார்கள்இதன் காரணமாக டெஸ்ட்போட்டியில் அவர்களை தோற்கடிப்பது இலகுவான விடயமல்ல. இலங்கை அணி இதற்காக மகிழ்ச்சியடையவேண்டும், பெருமைகொள்ள வேண்டும்,என ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
0 Comments